×

ஒன்றிய அரசை கண்டித்து ஆக.9ல் தேசிய அளவில் மாணவர்கள் போராட்டம்: கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ரோஜி எம் ஜான் பேட்டி

சென்னை: சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ரோஜி எம் ஜான், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் லெனின் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தனர். ரோஜி எம் ஜான் கூறியதாவது: இந்தியாவில் மாணவர்களின் பிரச்னைகள் குறித்து பேசுவதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாணவர்களின் குரல் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும். தேர்வு முறைகளை மாற்றி அமைக்க வேண்டும்.

அனைத்து தேர்வுகளுக்கும் வருடாந்திர அட்டவணைகள் வெளியிடப்பட வேண்டும் என்ற 3 கோரிக்கைகள் காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசிடம் வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகளை கண்டித்து 40 நாட்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெறும். அதனை தொடர்ந்து 40வது நாள் இறுதியில் தேசிய அளவில் ஆகஸ்ட் 9ம் தேதி டெல்லியில் மிகப்பெரிய மாணவர் போராட்டம் நடைபெறும்.

Tags : Union government ,Kerala Higher Education ,Minister ,Roji M John ,Chennai ,All India Youth Congress ,National General Secretary ,Lenin Prasad ,Chennai Press ,Club ,India… ,
× RELATED ரூ.127 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட 300...