×

குருவாயூர் கோயிலுக்கு பக்தர் யானை காணிக்கை

 

பாலக்காடு: திருச்சூர் மாவட்டம் நடவரம்புப்பாடத்தை சேர்ந்த பிரதீப் பாலாழி என்பவர் தனது குடும்பத்தினருடன் குருவாயூர் கோயிலுக்கு வளர்ப்பு யானை ஒன்றை காணிக்கை செலுத்தி வழிபட்டார். குருவாயூர் கோயில் கிழக்குக்கோபுர நடைப்பந்தலில் தங்கக்கொடிமரத்தின் முன்பாக யானையை காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோயில் மேல்சாந்தி செருப்புழச்சேரி தெக்கும்பரம்பத்து இல்லத்தை சேர்ந்த பிரம்மஸ்ரீ நாராயணன் நம்பூதிரி தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில், தேவஸ்தான நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பிரம்மஸ்ரீ பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாட், தேவஸ்தான நிர்வாகியும், மாவட்ட கலெக்டருமான ஷிகா சுரேந்திரன், உறுப்பினர் மனோஜ், துணை நிர்வாகி ராதா, ஜீவதனம் உதவி நிர்வாகி கீதா உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags : Guruvayur Temple ,Pradeep Balazhi ,Thurichur ,East Tower of Guruvayur Temple ,
× RELATED பஞ்சாப் முதல்வருக்கு எதிரான வீடியோ...