லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மத்திய சிறையில் காவலர்கள் ரீல்ஸ் பார்த்துக்கொண்டு இருந்த நேரத்தில் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கைதி தப்பியோடியுள்ளார். இதையடுத்து, 11 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தப்பி ஓடிய கைதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
