நன்றி குங்குமம் தோழி
அளவிற்கு அதிகமாக உணவினை உண்டால் பல்வேறு நோய்கள் உண்டாவதுடன் ஆயுளும் குறையும். எனவே, வயிறு புடைக்க, மூச்சு முட்ட உண்பதை தவிர்க்க வேண்டும்.
*உணவு உண்பதற்கு முன்னர் கை, கால், வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.
*காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.
*பேசிக்கொண்டும், படித்துக் கொண்டும் உணவை உண்ணக் கூடாது.
*இடது கையை கீழே ஊன்றிக் கொண்டே சாப்பிடக்கூடாது.
*காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது.
*சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.
*தொலைக்காட்சியை பார்த்தபடியும் உணவினை சாப்பிடக்கூடாது.
*சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக்கூடாது.
*இருட்டிலோ, நிழல் படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.
*உணவினை நின்று கொண்டு சாப்பிடக் கூடாது மற்றும் அதிக கோபத்துடனும் உணவினை உண்ணக் கூடாது.
*சாப்பிடும் போது தட்டினை கையில் எடுத்துக் கொண்டு சாப்பிடக்கூடாது.
*ஒரே நேரத்தில் பலவித பழங்களை சாப்பிடக் கூடாது.
தொகுப்பு: ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை
