சென்னை: மின்சார பேருந்து கொள்முதல் தொடர்பாக திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டரை தவெக அரசு ரத்து செய்துள்ளது. இதனால் பொதுமக்களிடையே அதிருப்தி அடைய செய்துள்ளது. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு மக்களிடம் மாபெரும் வரவேற்பை திட்டங்களை முடக்கும் பணிகளில் தவெக அரசு ஈடுபட்டு வருகிறது. சாலை பணிகள், மேம்பாலம் பணிகள் என அனைத்திலும் தொய்வு ஏற்படுத்தியுள்ள தவெக அரசு, தயார் நிலையில் உள்ள பூவிருந்தவல்லி மெட்ரோ ரயில் சேவையும் தொடங்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
மேலும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர்களை ரத்து செய்து வருகிறது. அந்த வகையில் அதிநவீன 500 மின்சார பேருந்து கொள்முதல் தொடர்பாக திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டரை தவெக அரசு ரத்து செய்துள்ளது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் சென்னையில் தனியார் மூலம் பேருந்துகளை இயக்க தவெக அரசு திட்டமிட்டுள்ளது.
இதனையடுத்து தனியார் மூலம் பேருந்து இயக்கும் வகையில் டெண்டரை மாற்றி அமைக்க ஒப்புதல் கோரி ஜெர்மனி வங்கிக்கு தவெக அரசு கடிதம் எழுதியுள்ளது. சென்னை பெருநகர் போக்குவரத்து கழகம் சார்பில் 625 பேருந்துகளை தனியாரிடம் வாங்கி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்க முயற்சி செய்யும் தவெக அரசுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
