சென்னை: சென்னை எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, சேப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்துவருகிறது. திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, காசிமேடு உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இன்று பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் தற்போது மழை பெய்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
