கோவை: திருமணத்தை மீறிய உறவிற்கு தடையாக இருந்ததாக தனது 3 வயது பெண் குழந்தையைக் கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021ம் ஆண்டு நடந்த குற்றவழக்கில் சரோஜினிக்கு (25) ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் தீர்ப்பளித்தார்.
