தாம்பரம், ஆவடி, மதுரை, கோவை, திருச்சி உள்பட 12 மாநகராட்சிகளில் தூய்மைப்பணி தனியார்மயம்: டெண்டர் கோரியது தமிழக அரசு

சென்னை: தாம்பரம், ஆவடி, மதுரை, கோவை, திருச்சி உள்பட 12 மாநகராட்சிகளில் தூய்மைப்பணியை தனியார்மயமாக்குவது தொடர்பாக, தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தூய்மைப்பணியாளர்கள் நேற்று எழும்பூரில் இருந்து தலைமை செயலகம் நோக்கி 500க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர். இதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, வேலூர் உள்பட மொத்தம் 25 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் தாம்பரம், ஆவடி உள்பட 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை பொது-தனியார் பங்களிப்பு முறையில் மேற்கொள்ள விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய அரசு டெண்டர் கோரி உள்ளது.

இதுதொடர்பாக ‘திட்ட மேம்பாட்டு மானிய நிதி’ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் மூலம் தமிழக திட்ட மேம்பாட்டு மானிய நிதி சார்பில் திடக்கழிவு சேகரிப்பு மற்றும் கொண்டு செல்லும் பணிகளுக்கான பொது-தனியார் கூட்டு திட்டங்களுக்கு 3 தொகுப்புகளில் ஆலோசனை நிறுவனங்களை நியமிக்க முன்மொழிவுக்கான அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆவடி, ஓசூர், தாம்பரம், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 12 மாநகராட்சிகளிலும் திடக்கழிவுகளை சேகரித்தல் மற்றும் கொண்டு செல்லுதல் தொடர்பான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிப்பதற்கும், பரிவர்த்தனை ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கும் ஒரு ஆலோசனை நிறுவனத்தை நியமிக்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 3 தொகுப்பு பிரிக்கப்பட்டு ஒரு தொகுப்பிக்கு ரூ.1.35 கோடி மதிப்பாகும்.
தகுதியான ஆலோசனை நிறுவனங்கள் அனைத்தும் விண்ணப்பத்தை www.tntenders.gov.in இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து அடுத்த மாதம் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணியை தனியார் மயப்படுத்த திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தூய்மை பணியை தனியார்மயப்படுத்த கூடாது, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் சென்னை, எழும்பூரில் இருந்து தூய்மை பணியாளர்கள் தலைமை செயலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். சுமார் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.

அப்போது, தூய்மை பணிகளை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு, பணி நிரந்தரம் ஆகிய கோரிக்கைகள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமன எதிர்ப்பு, வாரவிடுப்பு, பணி நேரத்தை குறைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் தூய்மை பணியாளர்கள் பேரணி சென்றனர்.

பிறகு, செய்தியாளர்களை சந்தித்த உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் பாரதி கூறியதாவது;
தமிழ்நாடு அரசு 12 மாநகராட்சிகளில் பொது – தனியார் பங்களிப்பில் தூய்மை பணியை தனியாருக்கு அளிப்பதற்கு ஆலோசனை அறிக்கை வழங்க நிறுவனம் ஒப்பந்தம் கோரி உள்ளனர். ஆட்சிக்கு வருவதற்கு முன் அரசுத் துறையில் 5 வருடங்கள் ஒப்பந்த முறையில் வேலை செய்திருந்தால் பணி நிரந்தரம் என வாக்குறுதி அளித்தனர். இப்போது, 12 மாநகராட்சியை தனியார் வசம் அளிக்க முயற்சி செய்தால் என்ன மாதிரி சமூக நீதி அரசு ஆட்சி நடக்கிறது? ஆட்சிக்கு வந்த 40 நாட்களில் தனியாருக்கு அளிக்க திட்டமிடுகிறது என்றால் எந்த மாதிரியான சமூகநீதி ஆட்சி நடக்கிறது.

மாநகராட்சி மக்களின் வரிப்பணத்தில் இயங்குகிறது. கார்ப்பரேட் தனியார் நிறுவனம் ஏன் லாபம் சம்பாதிக்கிறது? மக்களின் வரிப்பணத்தில் அரசே தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் அளிக்கலாம். இடையில் ஏன் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அருந்ததியர், ஆதி திராவிடர் அனைத்து சாதி ஏழைகளும் தூய்மை பணியாளர்களாகப் பணிபுரிகின்றனர். குப்பை அள்ளுபவர்களைக் குப்பையாக நடத்தும் விதமாக தனியார் முதலாளிகள் சம்பாதிக்கும் வகையில் 12 மாநகராட்சிகளை தனியாருக்கு அளிக்க ஆலோசனை ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. யார் லாபம் சம்பாதிக்க, யாருக்காக தனியாருக்கு அளிக்க திட்டமிடுகிறார்கள்? யாருக்காக இந்த அவசரம்?

இ.எஸ்.ஐ., பி.எப் உள்ளிட்ட பலன்கள் தனியாருக்கு அளித்தால் கிடைக்காது. தனியாருக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தம் முடிந்தால் அனைவரும் நடுத்தெருவுக்கு வந்துவிடுவார்கள். மீண்டும் வேறொரு நிறுவனத்திற்கு கொத்தடிமைகளாக தூய்மை பணியாளர்கள் செல்வார்கள். 20 ஆண்டுகளாக தூய்மை பணியாளர்களாக பணியாற்றுபவர்களின், ஊதிய முறையில் உழைப்பு சுரண்டல் நடைபெறும் சூழலில், தனியாருக்கு அழைப்பு விடுத்தால்

  • தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன் அரசுத் துறையில் 5 வருடங்கள் ஒப்பந்த முறையில் வேலை செய்திருந்தால் பணி நிரந்தரம் என வாக்குறுதி அளித்தனர்.
  • இப்போது, ஆட்சிக்கு வந்த 40 நாட்களில் தனியாருக்கு அளிக்க திட்டமிடுகிறது என்றால் எந்த மாதிரியான சமூகநீதி ஆட்சி நடக்கிறது.
  • மாநகராட்சி மக்களின் வரிப்பணத்தில் இயங்குகிறது. கார்ப்பரேட் தனியார் நிறுவனம் ஏன் லாபம் சம்பாதிக்கிறது?
  • அருந்ததியர், ஆதி திராவிடர் அனைத்து சாதி ஏழைகளும் தூய்மை பணியாளர்களாகப் பணிபுரிகின்றனர்.

Related Stories: