- முதல்வர்
- சட்டசபை
- வீட்டில்
- முன்னாள் அமைச்சர்
- சிவசங்கர்
- சென்னை
- எதிர்க்கட்சி தலைவர்
- உதயநிதி ஸ்டாலின்
- முதல் அமைச்சர்
- விஜய்
சென்னை: முன்னாள் அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: திங்கட்கிழமை எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் உரையாற்ற உள்ளார். நியாயமான கேள்விகள் மக்கள் மனதில் இன்னும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. அதற்குப் பதிலளிக்க முடியாத முதல்வர் விஜய், அவையில் மவுனம் காத்துவிட்டு, வீட்டிற்குச் சென்று மாலை வொர்க் அவுட் செய்துவிட்டு டிவிட்டரில் பதிலளிக்கிறார். சட்டமன்றக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத தங்களின் பலவீனத்தை மக்கள் பார்த்துவிடுவார்கள் என்ற பயத்தினாலேயே நேரலை தவிர்க்கப்பட்டு வருகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, திங்கட்கிழமை எதிர்கட்சித் தலைவர் மற்றும் பிற சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் உரையாற்றுவதை முறையாக நேரலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
கோவை மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் சிறுமிகளுக்கு எதிராக நடந்த கொடூரமான பாலியல் குற்றங்களைக் கண்டித்து, எதிர்கட்சியாகிய நாங்கள் களத்திற்கு வரும் முன்பே, பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கிவிட்டனர். காவல்துறைக்கு பொறுப்பான முதல்வர் இதற்குப் பதிலளிக்காமல் மவுனம் காக்கிறார். அவருக்குப் பதிலாக, காவல்துறைக்கு அவரே ஒரு ‘நிழல் அமைச்சர்’ போல மற்றொரு அமைச்சர் பேசி வருகிறார். முதலமைச்சர் உடனடியாக சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
