×

முதல்வர் விஜய் தலைமையில் ஜூன் 29, 30ல் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு

 

சென்னை: முதல்வர் விஜய் தலைமையில் ஜூன் 29,30 ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் முதல்வர் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு நடைபெறும். இந்த ஆண்டும் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் ஜூன் 29, 30ல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறுகிறது. முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டின்போது அரசின் நலத்திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சட்டம் ஒழுங்கு மோசம் அடைந்துள்ளது. இதனால் ஐஏஎஸ், ஐபிஎஸ் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து தற்போது இந்த மாநாடு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Tags : IAS, IPS conference ,Chief Minister ,Vijay ,Chennai ,IAS, ,IPS ,Chennai Secretariat… ,
× RELATED விளாத்திகுளம் பஞ்சாயத்து யூனியன்...