- மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர்
- எல்.முருகன்
- மாநில மத்திய அமைச்சர்
- தகவல்
- ஒலிபரப்பு
- சென்னை
- இறைவன்
- பாலசுப்பிரமணியம்
- சிறுவாபுரி பாலசுப்ரமணியர் கோவில்
- Periyapalayam
- திருவள்ளூர் மாவட்டம்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மற்றும் நாடாளுமன்ற விவகார துறை இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். பின்பு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் புதிய அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை. மகளிருக்கு 2500 ரூபாய் வழங்குவதாக கூறிய நிலையில் கடந்த ஆட்சியில் வழங்கியது போல 1000 ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார்கள். மேற்கு வங்கத்தில் பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியது போல 3000 ரூபாயை மகளிர் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
சொன்னதை செய்பவர்கள் பாரதிய ஜனதா கட்சியினர். ஆனால் தமிழ்நாட்டில் சொன்னதை செய்யாதவர்கள் தான் தமிழக வெற்றி கழக அரசு. தமிழக வெற்றிக்கழகம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். நிதிநிலை சரி இல்லை என வெள்ளை அறிக்கை வெளியிட்டு மக்களை ஏமாற்றக்கூடாது. நம்பி வாக்களித்த பெண்களுக்கு மாதம்தோறும் 2500 ரூபாய் வழங்குவதற்கான ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை வகுத்து, உடனே நிதியை வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
