×

பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தகவல்

 

சென்னை: பசுமை ஆற்றல் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்திடும் வகையில் 5 புதிய மண்டலங்கள் உருவாக்கம் செய்யப்படும் என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காற்றாலை மற்றும் சூரிய மின் திட்ட செயல்பாடுகளை மேலும் விரைவுபடுத்தும் நோக்கில், ஏற்கனவே இயக்கத்தில் இருந்த உடுமலைப்பேட்டை மற்றும் திருநெல்வேலி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வட்ட அலுவலகங்களின் நிர்வாக அமைப்பு கைவிடப்பட்டு மறுசீரமைக்க முடிவெடுக்கப்பட்டது.

சென்னை, திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களை தலைமையிடங்களாகக் கொண்டு ஐந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, அரசின் பசுமை ஆற்றல் இலக்குகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், காற்றாலை மற்றும் சூரிய மின் திட்ட செயல்பாடுகளை ஒருங்கிணைத்து விரைவுபடுத்தும் வகையில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இப்பணிகள் உதவி செயற்பொறியாளர்களின் தலைமையில் மேற்கொள்ளப்படும். தனித்திட்ட அமலாக்கம் மற்றும் கண்காணிப்பிற்கான கூடுதல் பொறுப்புகளும் சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிர்வாக மறுசீரமைப்பின் மூலம் பசுமை மின்சார உற்பத்தித் திறன் மேலும் அதிகரிக்கும்.

Tags : Minister ,C.T.R. Nirmal Kumar ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம்...