24 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 72,703 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 37,581 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.4.02 கோடி காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. 4.34 லட்சம் லட்டுகள் விற்பனையானது. 2.42 லட்சம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.

இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியதால் சுமார் 3 கி.மீ. தூரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்திலும் நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 8 மணி நேரத்திலும் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

Related Stories: