×

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை உடனே குறைப்பு இல்லை: ஒன்றிய அமைச்சர் திட்டவட்டம்

திருச்சூர்: அமெரிக்கா – ஈரான் போர் முடிவால் கச்சா எண்ணெய் விலை குறைந்துவிட்டதால் பெட்ரோல் , டீசல் விலை குறையுமா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து, ஒன்றிய பெட்ரோலிய துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி கூறுகையில், ‘இந்தியாவில் எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.3.94 மட்டுமே உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது என்ற காரணத்திற்காக உயர்த்தப்பட்ட விலைகளை உடனே குறைக்க முடியாது. போர் தொடங்கியதில் இருந்தே எண்ணெய் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. அந்த பாதிப்பை ஒன்றிய அரசு ஏற்று கொண்டது. இதனால் அரசுக்கு ரூ.12,000 கோடி நஷ்டம் ஏற்பட்டது’ என்றார்.

Tags : Union Minister ,Thrissur ,US ,Iran ,war ,Union Minister of State for Petroleum ,Suresh Gopi ,India ,
× RELATED மேலும் 3 கோடி ரேஷன் அட்டைகள்: ஒன்றிய அமைச்சர் தகவல்