×

ஈரான் உடனான அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்

 

பிரான்ஸ்: ஈரான் உடனான அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். ஈரான் மறுகட்டமைப்புக்கு ரூ.28 லட்சம் கோடி நிதி உதவி உட்பட 14 அம்ச அறிக்கையை வெளியிட்டது அமெரிக்க அரசு ஒப்பந்தம் மீறினால் குண்டு வீசுவோம் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் உடனான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்தானது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் பெசஸ்கியான் ஆகியோர் மின்னணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாக 60 நாட்கள் ஆகும்.அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து ஈரான் மறுகட்டமைப்புக்கு ரூ.28 லட்சம் கோடி நிதி உதவி அளிக்கப்படுமென்பது உட்பட 14 அம்ச அறிக்கையை வெளியிட்டது அமெரிக்க அரசு.

இதற்கிடையே அமைதி ஒப்பந்தப்படி நடக்காவிட்டால் ஈரான் மீது மீண்டும் குண்டு வீசுவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தில் இடம்பெற்ற 14 அம்சங்களை அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது

அதன்படி, லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை நிரந்தரமாக கைவிடுவது, ஈரானுக்கு மறுகட்டமைப்புக்காக 28 லட்சம் கோடி மதிப்பிலான நிதி உதவியை அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் வழங்குவது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், பிரான்ஸில் ஜி7 உச்சி மாநாட்டிற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அமைதி ஒப்பந்தப்படி ஈரானால் அணு ஆயுதத்தை உருவாக்கவோ, வாங்கவோ முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மற்ற நாடுகளிடம் பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருக்கும்போது, ​​ஈரானிடம் அவை இல்லாமல் இருப்பது நியாயமற்றது என்றும் டிரம்ப் கூறினார்.

Tags : US ,President ,Trump ,Iran ,France ,President Trump ,US government ,
× RELATED ரீல்ஸ் வெறியில் சுற்றும் தவெக...