×

திரையில் நாயகன்; தரையில் வில்லன்.. கதறல் கேட்குதா சி.எம், வாயில் ஏதாவது வருமா சி.எம்?, மாஸ்டர் வாயில் பிளாஸ்டர்..

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூட உள்ள நிலையில், வாய் திறங்க சி.எம் என்ற வாசகம் பொறித்த கருப்பு பேட்ஜ் அணிந்தபடி திமுக எம்.எல்.ஏ-க்கள் பேரவைக்கு வருகை தந்துள்ளனர். தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ள நிலையில், “வாய் திறங்க CM” என்ற கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தவெக அரசின் 1 மாத கால ஆட்சியின் லட்சணத்தை எடுத்துரைக்கும் வகையில் திரையில் நாயகன்; தரையில் வில்லன்.. கதறல் கேட்குதா சி.எம், வாயில் ஏதாவது வருமா சி.எம்? என்ற பல சாட்டையடி வாசகம் பொறித்த பதாகைகளுடன் பேரவைக்கு வந்த திமுக எம்எல்ஏ-க்கள், தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய்க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மேலும் முதல்வர் விஜயின் ஹைலைட் வாசகமான தூய சக்தி என்பதை விமர்சிக்கும் வகையில் தூய சக்தி அல்ல, துயர சக்தி என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஏந்தி திமுக எம்.எல்.ஏ-க்கள் முழக்கமிட்டனர். இவை தவிர

▪சிறு பெண்கள் இங்கே! சிங்கப் பெண்கள் எங்கே?

▪ரீல்ஸ் இங்கே.. ரியல் எங்கே?

▪மாஸ்டர் வாயில் பிளாஸ்டர்..

▪திரையில் HERO இல்ல.. தரையில் ZERO

▪தற்குறி ஆட்சி தமிழ்நாடே சாட்சி

▪தூய சக்தி அல்ல துயர சக்தி

உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் கைகளில் வைத்து கொண்டு முதல்வர் விஜய்க்கு எதிராக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

Tags : Katharal Kedkutha ,C. M ,Plaster ,Chennai ,Tamil Nadu Legislature ,Chief Minister ,Vijay ,Dimuka M. ,M. L. A ,
× RELATED தமிழகத்தில் 19 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!