×

“ஈயம் பூசின மாதிரியும் இருக்கனும், பூசாத மாதிரியும் இருக்கனும்” – ஆளுநரின் அழுத்தத்திற்கு பணிந்த விஜய் அரசு.!

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிலையில், சட்டப்பேரவையின் மரபு மாற்றப்பட்டு அவையில் இரு முறை தேசிய கீதம் பாடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

முந்தைய திமுக ஆட்சியின் போது சட்டப்பேரவை கூடும் போது தேசியகீதம் பாட வேண்டும் என்ற ஆளுநர் கோரிக்கை நிர்க்கரிக்கப்பட்டதே வரலாறு. ஆனால் முதல்வர் தலைமையிலான தற்போதைய தவெக அரசோ, பேரவை கூட்டத்தின் துவக்கத்திலேயே தேசிய கீதம் பாட வேண்டும் என்ற ஆளுநர் அழுத்தத்திற்கு பணிந்து உள்ளது.

“அவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, முடிவில் தேசிய கீதம் பாடுவதே மரபு”. பேரவை கூட்டத்தின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாவிட்டால் எதிர்கட்சிகளின் எதிர்ப்பு எப்படி இருக்கும் என்பது தவெக அரசுக்கு தெரியும், எனவே அதற்கு பயந்து தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை ஈயம் பூசின மாதிரியும் இருக்கனும், பூசாத மாதிரியும் இருக்கனும் என்ற பிரபல காமெடி வசனத்தை மனதில் வைத்து டீல் செய்துள்ளது.

எனவே தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட ஆளுநரிடம் கெஞ்சி கூத்தாடி அனுமதி பெற்றிருப்பார்கள் போல.! ஆனால் பதிலுக்கு அவர் தேசிய கீதத்தையும் கூட்டத்தின் துவக்கத்திலேயே பாடி விட வேண்டும் என நிபந்தனை விதித்திருக்க கூடும். எனவே இதுவரை இல்லாத வகையில் சட்டப்பேரவையின் மரபு மாற்றப்பட்டு அவையில் இரு முறை தேசிய கீதம் பாடப்பட்டு உள்ளது. முன்னதாக இன்று பேரவை கூட்டம் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது. உடனே எங்கள் விஜய் சொன்னதை செய்து விட்டார் என சோஷியல் மீடியாக்களில் புகழ்ந்து தள்ளினர். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்த உடன் உடனே அடுத்ததாக மரபில் இல்லாத வகையில் தேசிய கீதமும் பாடப்பட்டது.

இதனை தொடர்ந்து தவெக அரசு அச்சடித்து கொடுத்த அறிக்கையை அப்படியே வரி மாறாமல் ஆளுநர் உரை என்ற பெயரில் ஒப்பித்தார் ஆளுநர் அர்லேகர். பின்னர் ஆளுநர் உரையை தொடர்ந்து முடிவில் வழக்கமான மரபுக்கு மாறாக 2-ஆவது முறையாக மீண்டும் தேசிய கீதம் பாடப்பட்டது. இது எப்படி என்றால் ஒரே நேரத்தில் எதிர்கட்சியினரின் எதிர்ப்பையும் சமாளித்து விடலாம், ஒன்றிய அரசின் கோப பார்வையிலிருந்தும் தப்பித்து கொள்ளலாம் என்கிற ரீதியில் நாம் முன்பே குறிப்பிட்டது போல “ஈயம் பூசின மாதிரியும் இருக்கனும், பூசாத மாதிரியும் இருக்கனும்” என்ற வகையில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்து உள்ளனர். மொத்தத்தில் எப்படி பார்த்தாலும் ஒன்றிய அரசு மற்றும் ஆளுநரின் அழுத்தத்திற்கு தவெக அரசு பணிந்து விட்டதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

Tags : Vijay Government ,Chennai ,Tamil Nadu Legislature ,Chief Minister ,Vijay ,Tamil Nadu ,
× RELATED கொள்கை தலைவர்கள் வழியில்...