சோபா மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: சோபா மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும், மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்றும் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

திமுக எம்பி கலாநிதி வீராசாமி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
கலைஞர் நிழலாக வலம் வந்தவர் ஆற்காட்டார். இன்றைக்கு எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ, அந்தக் கட்சியின் கரை வேட்டி கட்டிக் கொண்டு சுற்றும் ஆட்களை நாம் இப்போது அதிகமாக பார்த்து கொண்டிருக்கிறோம். அதிலும் சோபா மாடல் ஆட்சிக்கு வந்த பின் இப்படியான சம்பவங்கள் அதிகமாக இருக்கிறது. இந்த அரசு எதை கொள்முதல் செய்கிறதோ இல்லையோ, அடுத்த கட்சி ஆட்களையும், எம்எல்ஏக்களையும் தொடர்ச்சியாக கொள்முதல் செய்து கொண்டு வருகிறது.

இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் ஒரே கொடி, ஒரே கட்சி, ஒரே இயக்கம் என்று ஆற்காட்டார் இன்றைக்கும் பயணம் செய்து கொண்டிருக்கிறார். நமக்கு வாக்களிக்காத மக்கள் எல்லாம் சோபா மாடல் ஆட்சி அமைந்த பின், இப்படிப்பட்ட மோசமான ஆட்சிக்கு நாம் ஓட்டு போட்டு விட்டோமே என்று வருத்தப்பட தொடங்கியுள்ளார்கள். இந்த சோபா மாடல் ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை. மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சி அமையும். தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் செல்லும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: