நீட் கொடுமையால் இன்னும் எத்தனை உயிர்களை இழப்போம்? ஒன்றிய அரசுக்கு சிபிஎம் கண்டனம்

சென்னை: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை:
நீட் மறுதேர்வு அச்சத்தால்கோவை மாணவி அனு கீர்த்தனா தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஏற்கனவே, நுழைவு தேர்வுகளுக்கு தயாராவதால் ஏற்பட்ட அழுத்தம், மருத்துவ கனவு தள்ளிப்போனதற்கான வருத்தம், நீட் தேர்வு ரத்தான பின்னணியில் மன அழுத்தமாகியுள்ளது.

நீட் தேர்வை தமிழ்நாட்டின் மீது திணித்துள்ள ஒன்றிய அரசு, நுழைவுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கத் தவறி, மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதால் இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம்?. தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு முற்றாக விலக்குப் பெற வேண்டும். மாணவ, மாணவிகள் இனி இத்தகைய துயரமான முடிவுகளை எடுக்கக் கூடாது என்று வேண்டி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: