ஏற்றுமதியில் ஏற்பட்ட கடும் சரிவு; மாம்பழம் விலை வீழ்ச்சி – விவசாயிகள் கவலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் 1 கிலோ மாம்பழத்தின் விலை ரூ5-க்கும் கீழ் வீழ்ச்சி அடைந்து உள்ளதால், மாம்பழங்களை குப்பையில் கொட்டும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் சேலத்திற்கு அடுத்தபடியாக திண்டுக்கல் மாவட்டத்தின் அல்போன்சா, பங்கனபல்லி, கிரேப் செந்தூரா, இமாம் பசன், மல்கோவா உள்ளிட்ட மாம்பழ ரகங்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில் நத்தம் சுற்றுவட்டார பகுதிகளான சாணார்பட்டி, கோபால்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு அமோக விளைச்சல் நடைபெற்றுள்ள நிலையில், மேற்காசிய போர் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் மாம்பழ ஏற்றுமதி கடும் சரிவை சந்தித்து உள்ளது. ஏற்றுமதியாளர்கள் கொள்முதல் செய்யாததால் மாம்பழ விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மாம்பழ விலை கிலோ 10 முதல் 20 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.5-க்கும் கீழ் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மாங்கூழ் தயாரிப்பு நிறுவனங்களை ஏற்படுத்தி, வீணாகும் மாம்பழங்களை மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: