சென்னை: விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து கடிதம் கொடுத்தார். இதையடுத்து விராலிமலை சட்டமன்ற தொகுதி காலியானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் தமிழக சட்டப்பேரவை செயலகம் சார்பில் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றிபெற்று, பின் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் 5 பேரின் ராஜினாமாவால் மொத்தமாக 6 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகள் அனைத்துக்கும் சேர்த்து மொத்தமாக வருகிற ஆகஸ்டு மாதம் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. மேலும், இந்த 6 தொகுதியை தவிர, மேலும் சில எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனால், அனைத்து தொகுதிக்கும் சேர்த்தே தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும்.
