தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2026-27 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் பதிவாளர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகாரம் பெற்றுள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் 15 இளங்கலை பட்டப்படிப்புகள், 14 முதுகலை பட்டப்படிப்புகள், 48 சான்றிதழ், பட்டய படிப்புகளை வழங்கி வருகிறது. இந்த படிப்புகளில் 2026-27ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பல்கலை.யின் www.tnou.ac.in இணைய வழி மூலம் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதள முகவரிக்கு சென்று தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: