புவனேஸ்வர்: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன நீண்ட தூர தரைத் தாக்குதல் க்ரூஸ் ஏவுகணையை (LRLACM) வெற்றிகரமாக சோதித்தது DRDO! . ஒடிசா அருகே உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவிலிருந்து வெற்றிகரமாக ஏவி திறன் நிரூபிக்கப்பட்டது. இது 1,500 கி.மீ. தூரம் வரை சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் தன்மை உடையது. ரேடார்களில் சிக்காதவாறு, மிகக் குறைந்த உயரத்தில் தரை & கடல் மட்டத்தை ஒட்டிப் பறக்கும் திறனுடையது ஆகும்.
