கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

 

பள்ளிபாளையம், ஜூன் 15: பள்ளிபாளையம் புதன் சந்தைபேட்டையை சேர்ந்தவர் சுஜித்(26). கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கஞ்சா வைத்திருந்ததற்காக, போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்துள்ளார். நேற்று ஆவத்திபாளையம் மயானம் பகுதியில், கையில் பையோடு நின்று கொண்டிருந்த சுஜித்தை போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது, அவரது கைப்பையில் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுஜித்தை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Related Stories: