மழையில் நனைந்து ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 1000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் திடீரென பெய்த கோடை மழையில் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள், வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருக்கும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த இரண்டாம் போகம் நெல்மூட்டைகளை திருவெண்ணெய்நல்லூரில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

அந்த நெல்மூட்டைகளை வணிகர்கள் கொள்முதல் செய்து வைத்திருந்த நிலையில் நேற்று நள்ளிரவு தீடீரென பெய்த கோடை மழையால் 500க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்தன. நெல் இருப்பு வைப்பதற்கான போதிய கட்டிடங்கள் இருந்தும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை கட்டிடத்திற்குள் அடுக்கி வைக்காமல் சென்றதால் மழையில் நனைந்து சேதமானதாக கூறப்படுகிறது. மேலும், விற்பனை செய்யப்படாமல் விவசாயிகள் திறந்தவெளியில் வைத்திருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளும் மழையில் நனைத்து சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Related Stories: