×

போதையில் ரகளை கொத்தனார் படுகொலை

கடலூர்: கடலூர் அடுத்த கே.என். பேட்டை வெங்கடா நகரை சேர்ந்தவர் ராஜ் (42). கொத்தனாரான இவர் வேலை முடிந்து மது போதையில் வீட்டுக்கு வந்து ஆபாச வார்த்தைகளால் மனைவி சௌந்தர்யாவை திட்டி தகராறு செய்வாராம்.  இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ராஜ் வேலையை முடித்துவிட்டு போதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதை பக்கத்து வீட்டில் வசிக்கும் கருப்புசாமி (43) தட்டி கேட்டுள்ளார். இருப்பினும் தொடர்ந்து ராஜ் ரகளையில் ஈடுபடவே ஆத்திரமடைந்த கருப்புசாமி, மொட்டை மாடியில் இருந்த சிமெண்ட் ஸ்லாப் கல்லை தூக்கி ராஜ் மீது போட்டுள்ளார். இதில் ராஜ் படுகாயமடைந்து உயிரிழந்தார். இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கொலை வழக்குப்பதிந்து கருப்புசாமியை கைது செய்தனர்.

Tags : Cuddalore ,Raj ,Venkata Nagar ,K.N. Pettai ,Soundarya ,Raj… ,
× RELATED 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்