சென்னை: குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டு, மேல் முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள போது சம்பந்தப்பட்ட கைதிக்கு பரோல் வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் இரு வேறு அமர்வுகள் வெவ்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளதால், இந்த விவகாரம் குறித்து முடிவெடுப்பதற்காக, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஏ. டி.ஜெகதீஷ் சந்திரா, எம்.நிர்மல்குமார், சுந்தர் மோகன் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டது.
இந்த வழக்கில், மாற்று கருத்து இருக்கிறதா என்று அறிந்து கொள்ளும் வகையில், நீதிமன்றத்துக்கு உதவியாக வழக்கறிஞர் ஒருவரை நியமிப்பதாக நீதிபதிகள் தெரிவித்து வழக்கின் விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு தள்ளிவைத்திருந்தனர். இந்நிலையில், நீதிமன்றத்துக்கு உதவியாக மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினத்தை 5 நீதிபதிகள் அமர்வு நியமித்து நேற்று உத்தரவிட்டுள்ளது.
