கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மரக்காணத்தில் மர்ம சாவு

மரக்காணம், ஜூன் 11: மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட சால்ட் ரோடு பகுதியில் ரூ.5.9 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணி கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம் படுகை கிராமத்தை சேர்ந்த வடிவேல்(60) என்பவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலை முடிந்து கட்டுமான பணி நடைபெறும் இடத்தின் அருகில் உள்ள கொட்டகையில் தூங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் வடிவேல் எழுந்து வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடன் வேலை செய்பவர்கள் கொட்டகை உள்ளே சென்று பார்த்தபோது வடிவேல் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டி குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பம் குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: