×

திருப்பதி கோயில் சாமி நகைகளில் உயர்தர கற்கள் மாயம்: அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு

திருமலை: நாடு முழுவதும் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட கோயில்களில், தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளின் விவரங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்து திருவாபரண பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. அதன்படி 2024-2025ம் ஆண்டிற்காக நாடு முழுவதும் உள்ள 81 திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது திருமலையில் உள்ள மூலவர் திருவாபரணத்தில் ரூ.47,500 மதிப்புள்ள கற்களும், மலையப்ப சுவாமி திருவாபரணத்தில் ரூ.18,910 மதிப்புள்ள கற்களும் காணாமல் போனது கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வில், கற்கள் மற்றும் இதர பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1.01 லட்சம் என தெரியவந்தது. மகரகண்டியில் ரூ.2,500 மதிப்புள்ள கற்களும், திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் ரூ.10,400 மதிப்புள்ள கற்களும் காணாமல் போயின. அதன்படி 81 கோயில்களில் இருந்து மொத்தம் ரூ.2 லட்சத்து 33 ஆயிரத்து 461 மதிப்புள்ள கற்கள் காணாமல் போனது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், பிரமோற்சவங்கள் மற்றும் பிற உற்சவங்களின்போது நகைகளை பயன்படுத்தும்போது, ​​அவற்றில் உள்ள சில கற்கள் காணாமல் போகிறது. திருவாபரணம் பதிவேட்டின் வருடாந்திர சரிபார்ப்பின்போது அதிகாரிகளிடமிருந்து இந்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. விதிகளின்படி, 6 மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து விளக்கம் கோரப்பட வேண்டும் என்று அறங்காவலர் குழு பரிந்துரைத்துள்ளது. அதன்படி விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Tirupati ,Tirumala ,Tirumala Tirupati Devasthanams ,
× RELATED எஸ்ஐஆர் பணியின் போது சந்தேக...