- U-18 ஆசிய கோப்பை ஹாக்கி
- இந்தியா
- ஜப்பான்
- கக்மீகஹாரா
- 18
- ஆசியக் கோப்பை ஹாக்கி
- ககாமிகஹாரா, ஜப்பான்
- ஜப்பான்…
காகமிகஹரா: ஜப்பானின் காகமிகஹரா நகரில் 18 வயதுக்குட்பட்டோருக்கான (சப்-ஜூனியர்) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஜப்பானை இந்திய அணி எதிர்கொண்டது. ஆட்டத்தின் 34-வது நிமிடத்திற்குள் 4 கோல்களை இந்திய அணி வீரர்கள் அடித்து ஜப்பான் அணியினரை அதிர்ச்சியடைய செய்தனர்.
இந்திய வீரர் ஆஷிஷ் தானி புர்தி 2வது, 28வது மற்றும் 34வது நிமிடங்களில் ஹாட்ரிக் கோல் அடித்தார். கேப்டன் கேதன் குஷ்வஹா 30-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இந்திய அணியின் இந்த தாக்குதலில் இருந்து மீள முடியாமல் ஜப்பான் அணி திணறியது. இறுதி வரை போராடிய ஜப்பான் அணி 52வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தாலும் இந்தியாவின் வெற்றியை தடுக்க முடியவில்லை. இறுதியில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
இந்த தொடரில் மொத்தம் 13 கோல்கள் அடித்து அசத்திய ஆஷிஷ் தானி புர்தி இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்தியா இந்த பட்டத்தை வெல்வது வரலாற்றில் மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு 2001 மற்றும் 2016ம் ஆண்டுகளில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
வீரர்களுக்கு ஊக்கத்தொகை
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீரருக்கும் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை, அணியின் பயிற்சி மற்றும் உதவி பயிற்சியாளர்களுக்கு தலா ரூ.1.4 லட்சம் வழங்கப்படும் என்று ஹாக்கி இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது. வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியின் ஒவ்வொரு வீராங்கனைக்கும் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
