×

உலக கோப்பை கால்பந்து பயிற்சி போட்டியில் போர்ச்சுக்கல், அர்ஜென்டினா வெற்றி

டெக்ஸாஸ்: 23வது உலக கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 11ம் தேதி துவங்குகிறது. இந்திய நேப்படி 12ம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு முதல் போட்டி துவங்குகிறது. இறுதிப்போட்டிகள் ஜூலை 19ம் தேதி நடக்கிறது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து இப்போட்டிகளை நடத்துகின்றன. 48 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் பிரதான அணிகள் பயிற்சி போட்டிகள் மூலம் தங்கள் தயார் நிலையை அதிகப்படுத்தி வருகின்றன. உலகின் வலிமையான அணிகளில் ஒன்றாக கருதப்படும் அர்ஜென்டினா அணி, ஹோண்டுராஸ் அணியுடன் கால்பந்து போட்டியில் விளையாடியது.

இதில் சிறப்பாக விளையாடிய அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் சுலப வெற்றி பெற்றது.
அர்ஜென்டினா வீரர்கள் லவுட்டாரா மார்டினஸ், சிமியோன் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர். இந்த போட்டியில் அர்ஜென்டினா அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான மெஸ்ஸி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி உலக கோப்பை தொடருக்கு தயாராக சிலி அணியுடன் நட்புறவு கால்பந்து போட்டியில் விளையாடியது. இந்த ஆட்டம் துவங்கியதிலிருந்தே சிறப்பாக விளையாடிய போர்ச்சுக்கல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போர்ச்சுக்கல் அணியில் கைடஸ், புருனோ பெர்னான்டஸ் தலா ஒரு கோல் அடித்தனர்.

Tags : Portugal ,Argentina ,World Cup ,Texas ,23rd World Cup football ,India ,United ,States ,Canada ,Mexico… ,
× RELATED டோக்கியோவில் நடைபெற்ற WR மகளிர் செஸ்...