சென்னை: சென்னை திருவல்லிக்கேணி, பெரம்பூர், முட்டுக்காடு, பொன்னேரி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட தொடர் மின்வெட்டைக் கண்டித்து நள்ளிரவில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக இரவு நேரங்களில் தூங்க முடியவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
