ஊட்டியில் ஆர்டிஓ தலைமையில் ஜமாபந்தி மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை

ஊட்டி, ஜூன் 6: நீலகிரி மாவட்டம், ஊட்டி தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 3ம் தேதி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) துவங்கி 3 நாட்கள் நடைபெற்றது. ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் டினு அரவிந்த் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இந்த வருவாய் தீர்வாய கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானோர் மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவித்தொகை, ரேசன் அட்டை, வீட்டுமனை பட்டா, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி விண்ணப்பங்கள் அளித்தனர்.

மேலும் குடியிருப்பை ஒட்டிய பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் மனுக்கள் வழங்கினர். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் டினு அரவிந்த் அறிவுறுத்தினார். குறிப்பாக உடனடி தீர்வு காணும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் ஊட்டி வட்டாட்சியர் சதீஷ் உட்பட வருவாய் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: