கும்பகோணம்: கும்பகோணம் திருவிடைமருதூர் அருகே கிணறு வெட்டும் பணியின்போது மண் சரிந்து விழுந்து விபத்துகுள்ளானது. கிணறு வெட்டும்போது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பாலு என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மண் சரிவில் சிக்கி பாலு உயிரிழந்த நிலையில், மற்றொரு தொழிலாளி மருதவாணன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
