தங்கைக்கு லவ் டார்ச்சர் தட்டி கேட்ட அண்ணனுக்கு தலையில் அரிவாள் வெட்டு

வடமதுரை, ஜூன் 4: வடமதுரை அருகேயுள்ள வடுகப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (25). இவர் ஒரு கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் டூவீலரில் மாணவியின் வீட்டை சுற்றி சுற்றி வந்துள்ளார். இதனை மாணவியின் அண்ணன், தந் தை ஆகியோர் தட்டி கேட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த் அரிவாளால் மாணவி அண்ணனின் தலையில் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீ காந்தை தேடி வருகின்றனர்.

 

Related Stories: