இஸ்ரேல் மீது தீவிர அன்பு கொண்ட சக்தி இந்தியா: பிரதமர் நெதன்யாகு புகழாரம்

புதுடெல்லி: இஸ்ரேல் மீது முற்றிலும் தீவிரமான அன்பு கொண்ட ஒரு மாபெரும் சக்தி இந்தியா என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஜோர்டான் பள்ளத்தாக்கில் நடந்த மாநாட்டில் பேசுகையில், இஸ்ரேல் பல முனைகளில் பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு தனது பாரம்பரிய நட்பு நாடுகளுக்கு அப்பாற்பட்ட கூட்டாளிகளுடன் உறவுகளை வலுப்படுத்த முயற்சிக்கிறது. நாங்கள் எங்கள் கூட்டணிகளை விரிவுபடுத்தி வருகிறோம். நீங்கள் குறிப்பிடுவது இந்த கூட்டணிகளை ஒரு பரந்த தளத்திற்கு விரிவுபடுத்துவதைப் பற்றியது.

அந்த பரந்த தளம் என்பது இந்தியா என்ற மாபெரும் சக்தியுடன் எங்களுக்கு இருக்கும் தனித்துவமான உறவு தான். உலகின் பல பகுதிகளில் இஸ்ரேல் சட்டபூர்வமற்றவர்களாக ஆக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இல்லை. இந்தியாவில் இஸ்ரேல் மீது அன்பு இருக்கிறது. இஸ்ரேல் மீது முற்றிலும் தீவிரமான அன்பு கொண்ட ஒரு மாபெரும்சக்தி இந்தியா. வேறு எந்த நாட்டைவிடவும் இந்தியாவில் இருந்து தான் எனக்கு அதிக ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: