10,114 மோசடி வழக்குப் பதிவு 2025-2026ம் நிதியாண்டில் ரூ.48,021 கோடி மோசடி: ரிசர்வ் வங்கி தகவல்

மும்பை: ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில், பொதுத்துறை வங்கிகள் 2025-2026ம் நிதியாண்டில் முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் மோசடி வழக்குகளின் எண்ணிக்கையில் சரிவை கண்டுள்ளன. அத்தகைய மோசடிகளில் சம்பந்தப்பட்ட தொகையின் அளவானது கணிசமாக உயர்ந்து ரூ-35,709கோடியாக உயர்ந்துள்ளது.

அரசுக்கு சொந்தமான வங்கிகள் 2025-2026ம் நிதியாண்டில் 5418மோசடி வழக்குகளை பதிவு செய்துள்ளன. 2024-2025ம் நிதியாண்டில் பதிவான 6916 வழக்குகளையும், 2023-2024ம் நிதியாண்டில் பதிவான 7446 வழக்குகளையும் விடக் குறைவாகும். மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட தொகையின் அளவானது, 2024-2025ம் நிதியாண்டில் ரூ.23,617 கோடியாகவும், 2023-2024ம் நிதியாண்டில் ரூ.8092கோடியாகவும் இருந்தது.

தனியார் துறை வங்கிகளிலும் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் 14024கோடியாக இருந்த மோசடி வழக்குகள் எண்ணிக்கை,2025-2026ம் நிதியாண்டில் 3956ஆக குறைந்துள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து 2024-2025ம் நிதியாண்டில் ரூ.32,803கோடி மதிப்பிலான 23722மோசடி வழக்குகளைப் பதிவு செய்திருந்தன. 2025-2026ம் நிதியாண்டில் ரூ.48,021கோடி மதிப்பிலான 10,114 வழக்குகளை பதிவு செய்துள்ளன.

Related Stories: