×

இலங்கைக்கு ரூ.6673 கோடி கடன் ஐஎம்எப் ஒப்புதல்

கொழும்பு: இலங்கைக்கு ரூ.6673 கோடி கடன் தவணை வழங்க சர்வதேச நாணய நிதியம்(ஐஎம்எப்) ஒப்புதல் அளித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின், விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்(ரூ.23044 கோடி) நிதி வசதிக்கு கடந்த 2023 மார்ச்சில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இலங்கைக்கான கடன் வசதியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு நேற்று முன்தினம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது கடன் தவணைக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனர் கென்ஜி ஒகமுரா தெரிவித்தார்.

இது குறித்து கென்ஜி ஒகமுரா கூறுகையில், சவாலான சூழ்நிலையிலும் இலங்கை விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் விதிகளை வலுவாகச் செயல்படுத்தியுள்ளது. டிட்வா புயல் மற்றும் மத்திய கிழக்கு போர் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் ஆபத்தான நிலையில் உள்ளது என்று தெரிவித்தார். 2026-ம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாகக் குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

Tags : IMF ,Sri Lanka ,Colombo ,International Monetary Fund ,
× RELATED அமெரிக்காவில் பயங்கரம் புளூ ஆரிஜன்...