×

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் 14 பேர் பலி

பெய்ரூட்: லெபனான் மற்றும் இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் இன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில் தங்களின் பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது. சிடோன் நகரில் இஸ்ரேல் ராணுவம் குண்டுமழை பொழிந்துள்ளது.

மேலும் பல இடங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்கள் வசித்து வந்த அடுக்குமாடிக் கட்டிடம் மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து குழந்தைகள் உட்பட 21 பேர் காயமடைந்தனர்.இதனிடையே இஸ்ரேலில் ஹிஸ்புல்லாவின் டிரோன் தாக்குதலில் இஸ்ரேலிய வீரர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

Tags : Lebanon ,Beirut ,US ,Washington ,Israeli army ,southern Lebanon ,Israeli ,Sidon… ,
× RELATED அமெரிக்காவில் பயங்கரம் புளூ ஆரிஜன்...