×

அதிபர் டிரம்ப் உருவபடத்துடன் கூடிய டாலர் நோட்டு

வாஷிங்டன்: அமெரிக்கா உருவானதன் 250 ஆவது ஆண்டு விழா வரும் ஜூலை மாதம் நடக்கிறது. இந்த விழாவையொட்டி டிரம்ப் உருவபடத்துடன் புதிய 250 டாலர் நோட்டு அச்சடிப்பதற்கான முன்மாதிரிகளை தயாரிக்குமாறு கருவூலத்துறை ஊழியர்களுக்கு அமெரிக்க கருவூல துறை அதிகாரி பிராண்டன் பீச் உத்தரவிட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க பெடரல் சட்டத்தின்படி, இறந்தவர்களின் உருவப்படங்கள் மட்டுமே நாணய நோட்டுகளில் இடம்பெற முடியும். டிரம்பின் உருவப்படம் ஒரு நாணய நோட்டில் இடம்பெறுவதற்கு, அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மசோதா நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : President Trump ,Washington ,United States ,BRANDON PEACH ,TRUMP ,
× RELATED அமெரிக்காவில் பயங்கரம் புளூ ஆரிஜன்...