வேதாரணயம், மே 28: வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய திமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய திமுக அவைத்தலைவர் ஏகாம்பரம்தலைமையில் நடைபெற்றது திமுக கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சதாசிவம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வேதரெத்தினம், நகர கழக செயலாளர் புகழேந்தி, பிவிகே பிரபு, ஒன்றிய துணைச் செயலாளர் கோவிந்தராசு, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செந்தமிழ்ச்செல்வன்,
மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பாளர் சத்தியமூர்த்தி, முன்னாள் மாவட்ட உறுப்பினர் சோழன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் ஒன்றிய கிளைக் கழக செயலாளர்கள், மாவட்ட ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள், கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கழகத்தின் வெற்றிக்காக அயராது உழைத்த நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் வருகிற ஜுன் 3ம் தேதி கலைஞர் பிறந்தநாளை கிளைக் கழகங்கள் தோறும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
