சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மக்களை இருட்டில் மூழ்கடித்துள்ளது. முதல்வர் விஜய்யின் ஆட்சியில், மின்வெட்டு மட்டுமின்றி தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னும் 2 ஆண்டுகளுக்குள் 4,000 மெகாவாட் மின் உற்பத்தி தேவைப்படும். அதற்கு என்ன திட்டங்கள் உள்ளன என்பதை தவெக அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
தமிழகத்தின் மின் சுய சார்பை உறுதி செய்ய முதல்வர் விஜய் என்ன செய்யப்போகிறார். இவரது நிலைப்பாட்டை சட்டசபையில் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். மின் உற்பத்தி நிலையங்கள் பழுதால் மின் உற்பத்தியில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. ‘நான் ஒரு தூயசக்தி. என்னிடம் வாருங்கள் எல்லாம் கிடைக்கும்’ என்று சொன்ன முதல்வர் விஜய் தற்போது நடந்து வரும் தொடர் மின்வெட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
