×

பாட்டிலுக்கு ரூ.10 வசூல்; சூப்பர்வைசர் மண்டை உடைப்பு: 20 ரூபாய் வாங்கிய 2 பேர் கைது

 

தொட்டியம்: திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே கொளக்குடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கொளக்குடிபட்டியை சேர்ந்த கனகராஜன் (45) சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இந்த கடையில் அழகேசன் மதுபாட்டில்கள் வாங்கி உள்ளார். அப்போது, சூப்பர்வைசர் கனகராஜ் கூடுதலாக 10 ரூபாய் வாங்கிஉள்ளனர்.

இதை தட்டிக்கேட்டு அழகேசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தான் கையில் வைத்திருந்த மது பாட்டிலால், சூப்பர்வைசர் கனகராஜின் தலையின் பின்புறத்தில் அழகேசன் பலமாக தாக்கினார். இதில் கனகராஜின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதுகுறித்து தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகேசனை கைது செய்தனர்.

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வேந்திரன்(23). இவர், நேற்று மதியம் மயிலாடுதுறை கூறைநாடு பஸ் நிறுத்தம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மது பாட்டில்கள் வாங்கி உள்ளார். அப்போது மதுபாட்டிலுக்கு ரூ.20 கூடுதலாக கேட்டுள்ளனர். இதுதொடர்பாக செல்வேந்திரன்அளித்த புகாரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிந்து சூப்பர்வைசர் குமாரசாமி(57), விற்பனையாளர் நேதாஜி(50) ஆகியோரை கைது செய்தனர்.

Tags : Thottiyam ,Kanagarajan ,Kolakudipatti ,TASMAC ,Kolakudi ,Trichy district ,Alagesan ,
× RELATED மூட்டைக்கு ரூ.2,500 வரை விலை சரிவு;...