மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 4,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 3,000 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 1,709 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 2,161 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
வரத்தை காட்டிலும், நீர்திறப்பு குறைவாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 78.81 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 78.89 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 40.85 டிஎம்சியாக உள்ளது.
