பாரில் டிப்ஸ் தர மறுப்பு; ஒருவருக்கு கத்திக்குத்து

 

வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சேர்ந்தவர் பிச்சைமுத்து (65) நேற்று மாலை அழகாபுரியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு மது அருந்தி விட்டு கிளம்பும் போது பாரில் வேலை செய்யும் நபர் டிப்ஸாக ரூ.50 வேண்டுமென கேட்டதாக கூறப்படுகிறது. பிச்சைமுத்து தர மறுத்து விட்டார். ஆத்திரமடைந்த பார் ஊழியர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிச்சைமுத்துவை சரமாரியாக குத்தியுள்ளார். படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: