வங்கதேசத்தில் மழைக்கு நடுவே ரயிலின் மேற்கூரையில் அமர்ந்து பயணிக்கும் இளைஞர்கள்…

டாக்கா: வங்கதேசத்தில் மழையில் நனைந்தபடி ரயிலின் மேற்கூரையில் நின்று கொண்டும், உட்கார்ந்து கொண்டும் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளைஞர்களின் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

பக்ரீத் பண்டிகையை ஒட்டி வங்கதேச தலைநகர் டாக்காவில் பணிபுரிந்து வரும் பல வெளியூர் மக்கள், பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு கூட்டம் கூட்டமாக புறப்பட்டு சென்று வருகின்றனர். இதன் காரணமாக ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ரயில் பெட்டிகளுக்குள் அமர்ந்து செல்ல மற்றும் நின்று கொண்டே செல்ல கூட இடம் கிடைக்காதவர்கள், தங்கள் ஊருக்கு செல்லும் ரயிலின் மேற்கூரையின் மேல் ஏறி பயணம் செய்தனர். அதுவும் தற்போது அங்கு மழை பெய்து வரும் நிலையில் வைரலாகி வரும் வீடியோவில், சில இளைஞர்கள் கனமழை பெய்து கொண்டிருக்கும் போதே ரயிலின் மேற்கூரையின் மீதேறி உட்கார்ந்தபடியும், நின்று கொண்டும் ஆபத்தான முறையில் பயணம் செய்வது பதிவாகி இருக்கிறது.

பண்டிகை கொண்டாடங்களின் போது தங்கள் சொந்த ஊருக்கு செல்ல லட்சக்கணக்கான மக்கள் ஒரேநேரத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் குவிவதால் ரயில்களில் இடம் கிடைக்காமல், மக்கள் ரயிலின் மேற்கூரையின் மேல் ஏறி பயணம் செய்வது அங்கு வாடிக்கையாக உள்ளது. அவ்வப்போது ரயில்களின் மேற்கூரையில் கம்பிகள், பாலங்கள் மற்றும் மரக்கிளைகள் மோதி பலர் காயமடையும் சம்பவங்களும் நடக்கின்றன.

Related Stories: