நெல்லை அருகே நூற்றுக்கு மேற்பட்ட வாத்துகள் கொலை: போதையில் அரங்கேறியுள்ள கொடூரம்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அடுத்த தருவையில், 100க்கும் மேற்பட்ட வாத்துகளை வாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டன. இன்று அதிகாலையில் போதையில் இலவசமாக வாத்து கரி தராததால் போதைக்கும்பல் வாத்துகளை அறிவால் மற்றும் வாளால் சரமாரியாக வெட்டி கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்த ராமசாமி (35) இவர் சொந்தமாக நூற்றுக்கணக்கான வாத்துகளை வளர்த்து தன்னை வைத்து வியாபாரம் செய்வதை தனது தொழிலாக செய்து வந்துள்ளார். நேற்று பகலில் ராமசாமி தோட்டப்பகுதியில் வாத்துகளை பராமரித்து வந்த போது மகராஜன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 2 பேர்கள் குடி போதையில் இலவசமாக வாத்து கரி கேட்டு ராமசாமியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் மகராஜன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 2 பேர்கள் சேர்ந்து போதையில் வாத்து உரிமையாளர் ராமசாமியையும் தாக்கிவிட்டு அங்கு அடைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட வாத்துகளை அறிவால் மற்றும் வாளால் வெட்டி கொன்றுவிட்டு தப்பித்து சென்றனர்.

உடனடியாக இன்று அதிகாலை முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதற்கு காரணமான மதராஜன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

Related Stories: