ஜூன் முதல் வாரத்தில் வெப்ப நிலை உயரக்கூடும் – வானிலை மையம் தகவல்

சென்னை: ஜூன் முதல் வாரத்தில் வெப்ப நிலை அதிகரிக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் இருக்கும். பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெப்ப நிலையை பொறுத்து ஆண்டுதோறும் முடிவு செய்யப்படும்.

இந்த நிலையில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வானிலை ஆய்வு மையத்திடம் கோடை தாக்கம் எப்படி இருக்கும் என கேட்டுள்ளதாகவும், வானிலை மையம் வழங்க கூடிய கருத்துக்களின் அடிப்படையில் பள்ளிகளின் திறப்பு இருக்கும் என குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது நிலவ கூடிய கோடை வெயிலில் வெப்பம் எப்படி இருக்க போகிறது தொடர்பான விவரங்களை வானிலை மையம் சமீபத்தில் வெளியிட்டது.

இதில் ஜூன் முதல் வாரம் வெப்ப நிலை வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கக்கூடும் கணிக்கப்பட்டது. ஜூன் 1 தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில் வெப்ப நிலை 4ம் தேதிக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் குறையும் என்று வானிலை மையம் தரப்பில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்டது. இந்த நிலையில் பள்ளிகள் திறக்கபடுவது தாமதமாகும் வாய்ப்புகள் இருப்பதாக சொல்லபடுகிறது.

Related Stories: