குமுளி மலைச்சாலையில் கிடக்கும் மணல் குவியலால் விபத்து அபாயம்

 

கூடலூர், மே 26: தேனி மாவட்டத்திலிருத்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு செல்லும் முக்கிய வழித்தடங்களில் ஒன்றாக திண்டுக்கல் – குமுளி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்தச் சாலையில் லோயர் கேம்ப் முதல் குமுளி வரை சுமார் 6.5 கி.மீ தூரம் பல கொண்டை ஊசி வளைவுகளையும், சாலையின் இருபுறமும் ஆபத்தான கிடுகிடு பள்ளங்களும் ,சில இடங்களில் குறுகியதாகவும் இச்சாலை உள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறையினர் இந்தச் சாலையை தங்களது பராமரிப்பில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்தசாலையின் சில இடங்களில் மழையினால் ஏற்பட்ட அரிப்பால் மணல் பரவி கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் வாரி விழுந்து விடும் அபாயம் உள்ளது. மேலும் சில இடங்களில் சாலை தடுப்புகள் சேதமடைந்திருக்கிறது. எனவே தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், இரு மாநில போக்குவரத்து முக்கியத்துவமுள்ள இந்த மலைச்சாலையில் தொடர் பராமரிப்பு பணிகளில் ஈடுபடுவதோடு சாலைகளில் பரவி கிடக்கும் மணல் மற்றும் கற்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: