பழநி, மே 26: பழநி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருள்மிகு பழநியாண்டவர் கலை- பண்பாட்டு கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லூரியின் முதல்வர் ரவிசங்கர் தலைமை வகித்தார். பழநி, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி வட்டார பகுதிகளை சேர்ந்த 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக பள்ளி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார், பள்ளி துணை ஆய்வாளர் சென்றாயன், மருத்துவ கல்வி அலுவலர் முகமது பல்ஹாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கல்லூரிகளில் உள்ள துறைகள், அதன் சிறப்புகள், வேலைவாய்ப்புகள், கல்லூரி பட்டப்படிப்பின் அவசியம் ஆகியவை குறித்து எடுத்துரைத்தனர்.
